விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
சிதம்பரம்: சிதம்பரம் விநாயகர் கோவில், திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கடந்த 14, ம் தேதி காலையில் கணபதி ஹோமம் நடைபெற்று, கஞ்சி வார்த்தல் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு சாமி வீதி உலாவும், கடந்த, 15ம் தேதி அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சுவாமி திரு ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயில் வளாகம் முன்பு நீண்ட வரிசையில் பெண்கள் அமர்ந்து விளக்கு பூஜையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜை பொதுமக்கள் நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், மழை வேண்டியும் நடைபெற்றது.
முன்னதாக சுவாமி அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகம் முன்பு ஊஞ்சலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை மெய்காவல் தெருவை சேர்ந்த இறை பணிக்குழுவினர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்
மேலும்
-
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆறு மணி நேரம் விஜய் 'ரோடு ஷோ'
-
யாரையும் விமர்சித்து பேச விரும்பவில்லை: விஜய் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம்
-
அ.தி.மு.க.,வை உடைப்பதற்காக ஸ்டாலின் போட்ட திட்டங்கள் தவிடுபொடி: பழனிசாமி ஆவேசம்
-
பெண்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்த தி.மு.க.,
-
ஆராய்ந்து பார்க்காமல் ஓட்டு போட்டால் ஆபத்து தான்!
-
தேர்தல் விதி மீறல் 250 பேர் மீது வழக்கு