தேர்தல் விதி மீறல் 250 பேர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் விதிமீறி, தேர்தல் பிர-சாரத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்-னேற்றக் கழக வேட்பாளர் உள்ளிட்ட, 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சென்-னகிருஷ்ணன், போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கடந்த, 18ல் இரவு, 8:00 மணி முதல், 10:00 மணி வரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் அலுவலரால் அனுமதி வழங்கப்பட்டி-ருந்தது. வேட்பாளர் தலைமையில், 250 நபர்கள் கூடியிருந்தனர். ஆனால், உரிய அனுமதி நேரம் முடிந்த நிலையில் இரவு, 10:20 மணிக்கு சசிகலா வருகை தந்தார். அப்போது பட்டாசுகள் வெடித்தும் மேளதாளங்களுடன் ஒலிபெருக்கி மூலம், கட்சி சின்-னமான தென்னந்தோப்புக்கு ஓட்டளிக்க கேட்டு தேர்தல் விதிமு-றைகள் மீறி தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் ஈடுபட்டதாக, பறக்கும் படை குழு அலுவலர் கோமதி புகார் அளித்தார். அதன் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வேட்பாளர் சென்னகி-ருஷ்ணன் உள்ளிட்ட, 250 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்-ளனர்.
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்