எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு கிருஷ்ணராயபுரம் :

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், எழுதியாம்பட்டி, திருக்காம்புலியூர், பஞ்சப்பட்டி, சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக தோட்டங்களில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் வாரந்தோறும் வாரச் சந்தைகளில் எலுமிச்சம் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடும் வெப்பத்தால், பழம் விற்கும் கடைகளுக்கு மொத்தமாக வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். தற்போது எலுமிச்சம் பழம் ஒன்று, 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் எலுமிச்சம் பழம் ஒன்று, 4 ரூபாய்க்கு விற்றது. தற்போது கூடுதலாக, 2 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

Advertisement