சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி ஓட்டு கேட்ட அமைச்சர்
சேலம்; சேலம் வடக்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாள-ராக அமைச்சர் ராஜேந்திரன், 3ம் முறை போட்டி-யிடுகிறார். அவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி-களில் பிரசாரம் செய்து, ஆதரவு திரட்டி வரு-கிறார். அதன் தொடர்ச்சியாக சேலம் முகமது புறா பகுதியில், தமிழ் இமாம்கள் பேரவையை சேர்ந்த இஸ்லாமிய மக்கள், மூவேந்தர் அரங்கில், சேலம் மாவட்ட திருச்சபைகள் மற்றும் தமிழ்நாடு கிறிஸ்தவ நல அமைப்பை சேர்ந்த போதகர்கள், சபை தலைவர்களை சந்-தித்து, உதயசூரியன் சின்னதுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்-பட்ட சிறுபான்மையினர் நலத்திட்டங்களை பட்-டியலிட்டு விளக்கினார்.
பின் அவர் பேசியதாவது:தி.மு.க., அரசு என்றும் சிறுபான்மையினர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மதவாத சக்திகளுக்கு எதிராக இருந்து, சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ஏற்கனவே பல்வேறு நலத்திட்-டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மீண்டும் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மேலும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்க-ளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாடு மையங்கள் அமைக்கப்படும். சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்படும். சிறுபான்மை பிரிவு இளைஞர்கள், இளம்-பெண்கள் ஆகியோருக்கு சிறப்பு திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். அதன்மூலம் ஆண்-டுக்கு, 25,000 இளைஞர், இளைஞிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். சிறுபான்மை பள்ளிகளில் காலி-யாக இருக்கும் அரபி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்பன உள்பட பல்-வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதனால் வரும் சட்டசபை தேர்தலில், மதச்சார்-பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிறுபான்மையினர் ஓட்டுப்போட வேண்டும். தி.மு.க., வேட்பாளர்களுக்கு உதயசூ-ரியன் சின்னத்திலும், கூட்டணி வேட்பாளர்க-ளுக்கு முரசு, கை சின்னங்களிலும் ஓட்டுப்-போட்டு, சேலம் மாவட்டத்தில், 11 தொகுதி வேட்-பாளர்களையும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, 2ம் முறை ஸ்டாலினை முதல்வர் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு கிறிஸ்தவ நல அமைப்பின் தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா உள்பட பலர் பங்-கேற்றனர்.
மேலும்
-
அ.தி.மு.க., வெற்றி தெளிவாக தெரிகிறது: கோகுல இந்திரா
-
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் மின்தடை: பொதுமக்கள் அவதி
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!