செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் மின்தடை: பொதுமக்கள் அவதி

செய்யூர்:செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

செய்யூர் பஜார் பகுதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. தாசில்தார் அலுவலக மின் இணைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நேற்று காலை 11:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.

இதனால், ஆதார் சேவை மையத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்து பணியாளர்களும் கடும் அவதிப்பட்டனர்.

பின் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து 2 மணிநேரத்திற்கு பின் மின்சாரம் வழங்கப்பட்டது.

தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து ஓராண்டாகியும் சீரமைக்கப்படவில்லை. மின்தடை ஏற்பட்டால் அங்கு வரும் மக்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சிரமப்படுதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement