துணை முதல்வருடன் அமைச்சர் சந்திப்பு

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்தித்து, அப்துல் ஜப்பார் மீது எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவாதித்தார்.

பெங்களூரு குமாரபார்க்கில் உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் அரசு இல்லத்தில், அவரை நேற்று பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்தித்து பேசினார்.

பின், அவர் கூறுகையில், ''அப்துல் ஜப்பாரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பேசினேன். தலைவரிடமும் சில அறிக்கைகள் உள்ளன. தலித்களும், சிறுபான்மையினரும் நம் வாக்காளர்கள்.

''அப்துல் ஜப்பார் தன் நிலை குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தட்டும். அதற்கு பின் கட்சி தலைமை முடிவெடுக்கும். கட்சியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யவே வந்துள்ளேன்,'' என்றார்.

Advertisement