அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
கோவை: கோவை வடக்கு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் வானதியை ஆதரித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் இரு சக்கர வாகனப் பேரணி நடந்தது. கணபதி சிவசக்தி காலனியில் துவங்கி, பாரதி நகர், மணியகாரம்பாளையம் வழியாக பேரணி சென்றது. பேரணியில் அண்ணாமலையுடன், வானதி ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்று, தாமரை சின்னத்துக்கு ஓட்டளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போது, கட்சியினர் மலர் துாவி ஆரவாரம் செய்தனர்.
பின், அண்ணாமலை கூறுகையில், “தேர்தல் கமிஷன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், அதற்கு போதுமான அதிகாரிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதோடு, அவர்களது பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வெளியூர்காரர்களை கோவையில் இருந்து வெளியேற்ற வேண்டும். கோவை வடக்கு தொகுதியில், 5,000 ரூபாய் அல்ல எவ்வளவு அதிக பணம் கொடுத்தாலும் வானதியை தோற்கடிக்கமுடியாது. கோவை மக்கள் ஸ்டாலினுக்கும் தி.மு.க.,விற்கும் பாடம் புகட்டுவர்,” என்றார்.
மேலும்
-
எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
-
அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
-
'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
-
பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
-
மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
-
மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு