அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 ரொக்கம் ப.வேலுார் அ.தி.மு.க., வேட்பாளர் சேகர் உறுதி
ப.வேலுார், ''அனைத்து
குடும்பங்களுக்கும், 10,000 ரூபாயை, அ.தி.மு.க., ஆட்சிக்கு
வந்தவுடன் முதல் கையெழுத்திட்டு வழங்கப்படும்,'' என, ப.வேலுார்
சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சேகர் தெரிவித்தார்.
ப.வேலுார்
சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ., சேகர்
போட்டியிடுகிறார். அவர், பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட
பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில்
ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான, பரமத்தி
வேலுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும், என
வாக்குறுதியளித்தார்.
தொடர்ந்து, பரமத்தி
ஒன்றியத்துக்குட்பட்ட பரமத்தி, படமுடிபாளையம், பொய்யேரி,
அனிச்சம்பாளையம், குப்பிச்சிபாளையம், கவுண்டம்பாளையம்,
வெட்டுக்காட்டுபுதுார், ப.வேலுார் மற்றும் தெற்கு நல்லியாம்பாளையம்
பகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று
ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, ப.வேலுார் பகுதியில் அவர் பேசியதாவது:
பரமத்தி
வேலுார் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க.,வின் இரும்புக்கோட்டை. இப்பகுதி
விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். விவசாயிகளுக்கு பாதுகாப்பு
கரங்களாக, அ.தி.மு.க., இருக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு
பாதுகாப்பு இல்லை. வளர்ச்சி இல்லை, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல்,
டீசல் விலை குறைப்பு, 'நீட்' தேர்வுக்கு என, தி.மு.க.,வினர் அளித்த எந்த
ஒரு வாக்குறுதியும் அவர்கள் நிறைவேற்றவில்லை. வெற்றி சின்னமான
இரட்டை இலைக்கு அனைவரும் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
ப.வேலுார்
அ.தி.மு.க., நகர செயலாளர் பொன்னி வேலு, பா.ம.க., மாவட்ட செயலாளர் ரமேஷ்,
பா.ம.க., நகர செயலாளர் ஜெய்கணேஷ். முன்னாள் கவுன்சிலர் கலைமகள்
செல்வம், பா.ஜ., மாவட்ட பொருளாளர் பத்மராஜா, பா.ஜ., பரமத்தி ஒன்றிய
தலைவர் அருண் மற்றும் அ.தி.மு.க.,-பா.ஜ.,-பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி
கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ர்.
மேலும்
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
-
சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்
-
சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்