ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

நாளை மாலை ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் ஓட்டுப்பதிவு மெஷின்கள் 'சீல்' வைக்கப்பட்டு, எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

நேற்று காலை தெற்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் தர்மேந்திர சிங், தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் ஆகியோர், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு சென்று முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.

Advertisement