மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்வு நாமக்கல் தி.மு.க., வேட்பாளர் ராணி பேச்சு


நாமக்கல், ''தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றவுடன், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,'' என, நாமக்கல் வேட்பாளர் ராணி உறுதியளித்தார்.

நாமக்கல் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் மகளிர் தொண்டரணி மாநில செயலாளர் ராணி போட்டியிடுகிறார். இவர், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், தேர்தல் வாக்குறுதிப்படி அடுத்த, ஐந்தாண்டுகளில், 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை, டன் ஒன்றுக்கு, 4,500 ரூபாய் வழங்கப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.
மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். காலை உணவு திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதியோர் உதவித்தொகை, 2,000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, 2,500- ரூபாயாகவும் உயர்த்தப்படும். பால் கொள்முதல் விலை, ஐந்து ரூபாய் உயர்த்தப்படும். சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில், பிணை எதுவுமின்றி, 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள, 'கூப்பன்' வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில், டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்த்தப்படும். ஆட்டோ வாங்க, 1.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளர் ராணி சென்ற இடங்களில் எல்லாம், பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றன

Advertisement