ரூ.10 கோடிக்கு மது விற்பனை

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 169 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நேற்று முதல், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மது பிரியர் கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும், 10 கோடி ரூபாய்க்கு மேல் சரக்கு விற்பனையானதாக, டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement