திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் ஸ்கேன் செய்து பாருங்கள்; சொல்கிறார் இபிஎஸ்
நமது நிருபர்
திமுககாரர்கள் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள், உறுப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது இபிஎஸ் பேசியதாவது: திமுகவில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரை புரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழகம். போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. திமுக அரசால் தடுக்க முடியவில்லை ஏனென்றால் திமுகவினர் துணை நிற்கிறார்கள். கல்வியில் சிறந்த நாமக்கல் மாவட்டத்தில் மோசமான நிலை உருவாகிவிட்டது.
ஸ்டாலினுக்கு கோபம்
அப்பா என்றால் என் செவிக்கு மகிழ்ச்சியாகிறது என்கிறார் ஸ்டாலின். பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டலில் கதறும்போது அப்பாவுக்குக் காது கேட்காதா? சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. பத்திரிகையில் வந்த செய்தியைத் தான் பேசுகிறோம். 2 வயது குழந்தை கிருஷ்ணகிரியில் பாலியல் கொலை.
குமாரபாளையத்தில் 7 வயது சிறுமிக்கு ஒரு கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்தான். தங்கமணி நேரில் சென்று விசாரித்தார். இதையெல்லாம் சொன்னால் ஸ்டாலினுக்குக் கோபம் வருகிறது. ஏழைகளின் வறுமை கொடுமையைப் பயன்படுத்தி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னியை அபகரித்தனர்.
கிட்னி புரோக்கர்
திமுக அரசே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்று சொல்லியது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. கிட்னி புரோக்கரை மட்டும் தான் கைதுசெய்தனர். மருத்துவமனை தான் தவறு செய்தது, அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கமிஷனுக்காக நடந்தது என்று புரோக்கரை கைது செய்து கேஸை மூடிவிட்டனர்.
திமுககாரர்கள் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள், உறுப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். எவ்வளவு கொடுமை, இப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா? வறுமையைப் பயன்படுத்தி உறுப்புகளை திருடும் அரசு தேவையா?
திராணியற்ற முதல்வர்
பார்லிமென்டில் மத்திய அரசின் மசோதாவைதோற்கடித்ததாக பேசுகிறார் ஸ்டாலின், திராணியற்ற முதல்வர், என்னவென்றே தெரியாத பொம்மை முதல்வர். மத்திய அர்சு என்ன கொண்டுவந்தது பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, அந்த மசோதாவை தோற்கடித்த கட்சி திமுக, உங்களுக்கு கிடைத்த உரிமையை தடுத்தது காங்கிரஸ், திமுக கட்சி. திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?
பிரதமர் மோடி நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், நாமும் ஏற்றுக்கொண்டோம்,
மசோதா கொண்டுவந்தார். திமுக எதிர்த்து ஓட்டு போட்டு தோற்கடித்தது திமுக கூட்டணி. பெண்கள் மன்னிப்பார்களா? பெண்களின் உரிமையை பறித்துவிட்டார் ஸ்டாலின். இதற்கு ஒவ்வொரு பெண்களும் திமுகவுக்கு தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். அதிமுக வின்னிங்; நல்லாட்சி கம்மிங். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
மேலும்
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
-
'அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து சாந்தி புகழாரம்
-
இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி