வேட்பாளர்களின் அடுக்கடுக்கான வாக்குறுதிகள் : வாக்காளர்கள் திணறல்

திருவாடானை:திருவாடானை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அடுக்கடுக்கான வாக்குறுதி அறிவிப்புகளை கேட்டு வாக்காளர்கள் திணறுகின்றனர்.திருவாடானை தொகுதியில் யார் அதிக வாக்குறுதிகள் கொடுப்பது என்ற போட்டி வேட்பாளர்களிடையே பலமாக உள்ளது. திருவாடானை தொகுதியில் மக்களின் நீண்ட கால கோரிக்கைளை துாசு தட்டி எடுத்து அதை வாக்குறுதிகளாக மாற்றி ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.



திருவாடானை மக்களின் நீண்ட கால கனவாக உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் (கோட்டாட்சியர்), வாகன பதிவுக்கும், உரிமத்திற்கும் நீண்ட துாரம் அலைவதை தவிர்க்க வட்டார போக்குவரத்து அலுவலகம், விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை துார்வாருதல், பஸ்டெப்போ, வேளாண்மை கல்லுாரி போன்ற பல்வேறு வாக்குறுதிகள் பேசபடுகிறது. வேட்பாளர்களின் இந்த அதிரடி அறிவிப்புகளை கேட்டு வாக்காளர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் தேர்தல் முடிந்ததும் காற்றில் பறந்துவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

Advertisement