காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம், மதுரை லைப் லிப்ட்டிங் ட்ரஸ்ட், உதயன் காளான் வளர்ப்பு மையம் இணைந்து நடத்தின. கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். காளான் வளர்ப்பு மைய நிறுவனர் கிருஷ்ணகுமாரி, பயிற்சியாளர்கள் பாண்டியராஜன், இப்ராஹிம் மாணவர்களுக்கு காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், பயன்பாடு, சந்தைப்படுத்துவது குறித்தும், சுயதொழில் செய்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கற்பகவள்ளி நன்றி கூறினார். -

Advertisement