ஒதியம்பட்டு கோவிலில் குருபூஜை விழா
புதுச்சேரி: ஒதியம்பட்டு வண்ணாரபரதேஸ்வர சுவாமி கோவிலில், (20ம் தேதி) குருபூஜை விழா நடக்கிறது.
வில்லியனுார் சாலை ஒதியம்பட்டு பகுதியில் வண்ணாரபரதேஸ்வர சித்தர் கோவில் உள்ளது. 234ம் ஆண்டு குரு பூஜையையொட்டி, கோ பூஜை, கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.
முக்கிய நிகழ்வான (20ம் தேதி) காலை 7:00 மணிக்கு அகவல் பாராயணம் தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பால் குடம், புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிேஷகம் மற்றும் தீபாராதனை செய்து குரு பூஜை நடக்கிறது.
மதியம் 12:30 மணிக்கு பசி ஆற்றுவித்தல் நிகழ்ச்சி, மாலை 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
Advertisement
Advertisement