கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; வசந்தம் கார்த்திகேயன் உறுதி
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என வசந்தம் கார்த்திகேயன் பேசினார்.
ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் நேற்று பகண்டை கூட்டுரோட்டில் இருந்து பெரிய பகண்டை, யால், மையனுார், பழையசிறுவங்கூர் வழியே பைக்கில் பேரணியாக சென்று சூளாங்குறிச்சி மணிமுக்தா ஆற்றங்கரை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது; தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளித்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒருங்கிணைந்து சுறுசுறுப்புடன் தேர்தல் பணியாற்றினர். அரசின் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை பொது மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு திரட்டினர். ஓய்வின்றி உழைத்த அனைவருக்கும் நன்றி. கள்ளக்குறிச்சி மாவட்ட 4 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என பேசினார்.
தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், தொழிலதிபர் செந்தில்குமார், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், வி.சி., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஜெய்கணேஷ், கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் ரஞ்சித் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.