மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 269 பேர் பிடிபட்டனர்
புதுடில்லி: டில்லி மாநகரில் நேற்று முன் தினம் இரவு போலீசார் அதிரடி சோதனையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய, 269 பேர் பிடிபட்டனர்.
வார இறுதி நாளான சனிக்கிழமை இரவில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை டில்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டில்லி மாநகர் முழுதும் நேற்று முன் தினம் இரவு 9:00 மணி முதல் நள்ளிரவு வரை மூன்று மணி நேரம் போலீசார் அதிரடி ் சோதனை நடத்தினர்.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்த, 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 38 பேரிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 7,478 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 6,844 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. மேலும், 634 பேரிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் மற்றும் ஸ்கூட்டரில் செல்பவர்கள் தான் அதிகளவில் இந்த வழக்கில் பிடிபட்டுள்ளனர்.
இனி வரும் நாட்களில், நள்ளிரவிலும், வார இறுதி நாட்களிலும் மாநகர் முழுதும் தீவிரமாக வாகன சோதனை நடத்தப்படும் என டில்லி மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும்
-
மாதர் தம்மை மகிமைப்படுத்தும் 'பிங்க்' வண்ண வாக்குச்சாவடிகள்
-
ஓட்டுச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதி; அதிகாரிகள் தீவிரம்
-
பிரதான கால்வாய் புதுப்பிப்பு எப்போது? வாக்குறுதி மட்டும் மாறல
-
வெயிலோடு விளையாடாத குழந்தைகளின் எலும்புக்கு பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
-
சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காக காஞ்சி ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை