வெயிலோடு விளையாடாத குழந்தைகளின் எலும்புக்கு பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
கோவை: எலும்பு பலவீனமாக இருப்பதாக சிகிச்சைக்கு வரும் குழந்தைகளில் பலர், வெயிலில் விளையாடாததால், இயற்கையாக உடலுக்கு கிடைக்கும் விட்டமின் டி சத்து பற்றாக்குறை இருப்பவர்களாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வளரும் பருவத்தில், எலும்பு பலவீனமடைந்து சிறிய அடிப்பட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படுதல், வயதுக்கேற்ற உயரம் இல்லாமை, பல் முளைப்பதில் தாமதம், சீக்கிரம் பற்கள் உடைதல், தசை பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்காக சமீப காலமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கு சூரிய வெயிலில் சிறிது நேரம், குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டுமென, டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை இயன்முறை சிகிச்சை பிரிவு மருத்துவர் பத்மராணி கூறுகையில், '' கால்சியம் சத்து உறிஞ்ச விட்டமின் டி அவசியம். தினசரி காலை 20-30 நிமிடங்களாவது, குழந்தைகள் சூரிய ஒளியில் விளையாடுவது அவசியம். சத்தான உணவுடன், வெயிலில் சிறிது நேரம் விளையாட அனுமதிப்பது, சில உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். வளரும் பருவத்தில் எலும்புகள் சீக்கிரம் பலமாகிவிடும்,'' என்றார்.
மேலும்
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு