சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காக காஞ்சி ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காக, காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை பொது விடுமுறை என, ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்காக தமிழகம் முழுதும் நாளை பொது விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வளாகங்கள், நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை பொது விடுமுறை என, ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்கெட்டின் இரு நுழைவாயில்களிலும் ‛பிளக்ஸ் பேனர்' அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement