மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ராசிபுரம்,:ராசிபுரம்
அருகே, முத்துக்காளிப்பட்டி, குடித்தெரு பகுதியை சேர்ந்தவர்
ராஜேந்திரன் மகன் சீனிவாசன், 25. இவர், ராசிபுரம் பட்டணம் ரோட்டில்
உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில், 'லேப்' டெக்னீசியனாக வேலை செய்து
வந்தார். நேற்று முன்தினம், சீனிவாசன் வீட்டில் உள்ள சிறிய மோட்டார்
மூலம் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அவர்
மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டபோது, எதிர்பாராத விதமாக
அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் துாக்கி வீசப்பட்ட சீனிவாசன்
சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த
அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக
ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதித்த
டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவரது ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.