மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

கரூர்:மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து, 420 கன அடியாக சரிந்துள்ளது.

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 420 கன அடியாக வந்தது. குடிநீர் தேவைக்காக, அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 4.47 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement