இன்றும் நாளையும் வீட்டிலேயே இருங்க!

22

தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களை ''கவனிக்க'' தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., வேட்பாளர்களால், தங்கள் தொகுதியில், 'பூத்' வாரியாக உள்ள மொத்த ஓட்டுகளில், 60 - 70 சதவீத வாக்காளர்களுக்கு சிறப்பு 'கவனிப்பு'க்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதல் பணப் பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு, சென்னையில் பிரசாரம் செய்தார். போலீசார் முழுவீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனவே, 'கவனிப்பு' நடக்கவில்லை.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில், 'கவனிப்பு' பணிகளை, அதிகாலை முதல் நண்பகல் வரை; மாலை முதல் நள்ளிரவு வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று துண்டறிக்கை வழங்கி, 'எங்கேயும் போய்டாதீங்க; கவனிப்புடன் வருகிறோம்' என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement