1,126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

3

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 1,126 வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி இருப்பது, ஏ.டி.ஆர்., என்ற, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலில், 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், 3,992 பேர் மீதான குற்ற வழக்குகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது, 722 பேர், வாய் தகராறு உள்ளிட்ட சாதாரண குற்ற வழக்குகளில் சிக்கி இருப்பதும், 404 பேர் அடிதடி உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 18 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும், 13 பேர் கொலை வழக்கிலும், 44 பேர் கொலை முயற்சி வழக்கிலும் சிக்கியுள்ளனர். கடந்த 2021 சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளவர்களில், 131 பேர் சாதாரண வழக்குகளிலும், 55 பேர் கடுமையான வழக்குகளிலும் சிக்கி உள்ளனர். இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மீது கொலை வழக்கு, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tamil News

Advertisement