65 விவசாய சங்கங்கள் இணைந்து தி.மு.க.,வுக்கு எதிராக களப்பணி
பல்லடம்: ''தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களுக்காக, இந்த ஆட்சியை அகற்றுவதற்காக, 65க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து, தேர்தல் களப்பணி ஆற்றுகிறோம்,'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2021 தேர்தலில், விவசாயிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த தி.மு.க., அவர்களுக்கு அளித்த, 83 வாக்குறுதிகளில், 73 வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. விவசாயிகளுக்கு பெரிதாக பயன் தராத வெறும், 10 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது.
'விவசாயிகளின் ஒப்புதல் இன்றி, நிலம் எடுக்கப்படாது' என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், இன்று, 40 சிப்காட் திட்டங்களுக்காக, 1.10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை, அடிமாட்டு விலைக்கு அபகரித்துள்ளார்.
மேலும், இனாம் நிலங்களின் மதிப்பை, 'பூஜ்ஜியம்' ஆக்கி, விவசாயிகளின் நில உரிமையை பறித்ததையே, ஒரு சாதனையாக இந்த அரசு கொண்டாடி வருகிறது. திருவண்ணாமலையில், விளை நிலங்களை காக்க, அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது, குண்டர் சட்டத்தை பாய்ச்சிய ஒரே அரசு தி.மு.க., தான்.
மேலும், தி.மு.க., மாநாட்டிற்காக, 5,000 லோடு மண், சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதை கண்டித்தவர்கள் மீதும், கறிக்கோழி கூலி உயர்வு கேட்டு போராடியவர்கள் மீதும், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது இந்த அரசு.
இதனால், தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற, 65-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், தமிழகம் முழுதும் தீவிரமாக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தமாக 12 பேர் தான் இருக்கிறார்கள்.. இவர்கள் தான் 65 விவசாயிகள் அமைப்பு...
அராஜக திமுக அரசு ஒழியட்டும்.
உண்மை முகம் தெரிகிறதா இதுதான் திமுகவின் உண்மை முகம்.
இந்த காக்கைகளை நம்ப முடியாது ...... திமுக மட்டும் பிரியாணி சோறு வெச்சுட்டா நிலைமை மாறிடும் ....
விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 2024-25 ல் நெல் போன்ற பயிர்களின் வளர்ச்சி 2% குறைந்து உள்ளது. நெல், வாழை போன்ற பயிர்கள் புயலினாலும் வெள்ளத்தினால் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது. இன்சூரன்ஸ் கம்பெனிகள் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகையில் ஒரு ஏக்கருக்கு 36 ரூபாய் வழங்கிய கொடுமையும் இங்கே நடந்து உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் முடிவுக்கு பின் யாரெல்லாம் அரசிற்கு அவமதிப்பை ஏற்படுத்தினார்களோ??? அவர்களை எல்லாம் சரியாக இனம்கண்டு ஜோஷப் ஸ்டாலின் மாதிரி உறுதியான நடவடிக்கைகள் மூலம் களையெடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பயிர்களான மக்கள் வளம்பெறும் விவசாயம் நடக்கும். கடந்த இருமாத மலர் பிரதிகளை பாதுகாத்து வையுங்கள் ஆட்சிக்கு விரோதமாக மக்கள் மனங்களில் நஞ்சை விதைக்க முயன்ற ஒவ்வொருவரையும் கழை யெடுங்கள் அதுவே முதல் தரமான சம்பவமாக இருக்கட்டும் . அறிஞர் அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் சில மாதங்களுக்கு தள்ளி வையுங்கள். எச் ராஜா சொன்னதுபோல ஸ்டாலின் மோர் டான்ஜெரோஸ் தன் கருணாநிதி என்பதை மற்றவர்களுக்கும் புரியவையுங்கள்.
முதலில் கட்சி மானத்தை வாங்கியவர்களை வளர்ச்சி பணிகள் செய்யாமல் ஜல்லி அடித்தவர்களிடம் இருந்து வளர்ச்சி துவக்குங்கள் ...விவசாயிக்கள் கிள்ளு கீரை அல்ல ...
Still fsrmers are drying the food grains on the roads and they will be spoiled.No safety godowns for them by this govt.why should they vote for this govt.
டெல்டா விவசாயி என்ற திமுக கொத்தடிமையின் கருத்து என்ன .
சாதி வெறித்தனம்
இதுல எதுடா சாதி கொத்தடிமை, 200 ரூ வங்கினோமா குவாட்டர் போட்டமா குப்புறப்படுத்தாம போயேசேர்ந்தமனு இரு
உங்க தட்டில் உள்ள வெந்த சோறில் எப்படி சாதி கண்டு பிடிப்பிங்க சார்
மக்கள் விரோத திமுக அரசு ஒழியட்டும். நாடு நலாயிருக்கும் பெறட்டும். கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடிகளை கடம் வங்கி ஏப்பம் விட்ட கொள்ளையர் ஆட்சி தொலையட்டும். மாணவர்கள், இளைஞர், பெண்கள், விவசாயிகள் வாழ்வு மேம்பட இந்த திருட்டு திமுக அரசு அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் ஒன்னுக்கும் உதவாமல் போய் விடும்.மேலும்
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
-
அரசு பேருந்து மோதி பெண் பலி: ரூ.37 லட்சம் இழப்பீடு தர உத்தரவு