ஓட்டுச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் 308 ஓட்டு சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவடைந்து, அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இத்தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, , தமிழர் வெற்றி கழகம் ,நாம் தமிழர், ,புதிய தமிழகம், வேட்பாளர்கள் உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சைகளை தவிர மற்ற அனைவரும் கடந்த 10 நாட்களாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் இறுதிக்கட்டமாக வாகன அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க, ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்தல், தேர்தல் ஓட்டுப் பதிவு அலுவலர், துணை அலுவலர்கள், போலீசார் நியமனம் செய்தல், ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் உட்பட அனைத்து பணிகளையும் முடித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இத்தொகுதியில் உள்ள 308 ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது.
நாளை (ஏப். 22) காலை 10:00 மணி முதல் தாலுகா அலுவலகத்தில் ஓட்டு சாவடிகளுக்குரிய எந்திரங்கள், தேர்தல் ஆவணங்கள் வழங்கப்பட்டு மாலை 5:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளில் அலுவலர்கள் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும்
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
-
'அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து சாந்தி புகழாரம்