கூரியர் ஊழியரை கடத்தி தாக்கிய 4 பேர் கைது

ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் கபில் அகமது, 34. இவர், அப்பகுதியில் உள்ள, கூரியர் நிறுவனத்தில் பணி-யாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தன் பைக்கில் நேதாஜி ரோட்டில் சென்றார்.


எதிரே வந்த ஆம்பூர் வாத்திமனையை சேர்ந்த ஜூல் பீகரலி, 30, என்பவர் ஒட்டி வந்த பைக்கும், கபில் அகமதுவின் பைக்கும் மோதின. இதில் ஜூல் பீகரலி, தன் தம்பியான கபில், 28, என்-பவருக்கு போன் செய்து, விபத்து குறித்து தகவல் தெரிவித்தார். கபில், தன் நண்பர்களான ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியை சேர்ந்த ஸ்மைல், 23, தவ்ஹீப், 27, ஆகியோருடன் காரில் சம்பவ இடம் வந்து, கூரியர் ஊழியர் கபீல் அகமதுவை காரில் கடத்திச்-சென்று, ஜூல் பீகரலி உட்பட, 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். புகார் படி, ஆம்பூர் டவுன் போலீசார், ஜூல்பிகரலி, கபில், ஸ்மைல், தவ்ஹீப் ஆகிய, 4 பேரையும் கைது செய்தனர்.

Advertisement