சனத்குமார் ஆறு துார்வாரப்படும்
தர்மபுரி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்
சவுமியா, நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தர்மபுரி சட்ட-சபை தொகுதிக்கு உட்பட்ட நியூ காலனி, ஹவுசிங்போர்டு, குள்-ளனுார், வெண்ணாம்பட்டி, ஏ.ஜெட்டிஹள்ளி உள்ளிட்ட பணி-களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில், திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து, சவுமியாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது, சவுமியா
பேசியதாவது:
தர்மபுரியில் ஏமகுட்டியூர், பாரதிபுரம், அன்னசாகரம், குப்பாண்டி தெரு, காமாட்சி அம்மன் தெரு, மதிகோன்பாளையம், கிருஷ்ணா-புரம் என, தர்மபுரி டவுன் பகுதியில், 7 கி.மீ., தொலைவிற்கு பய-ணிக்கும் சனத்குமார் ஆற்றில், கழிவுநீர் தேங்கி, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதனால், சனத்குமார் ஆற்றை ஒட்டியுள்ள நீர் நிலைகளில் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆற்றை துாய்மை படுத்த தர்மபுரி நகராட்சி நிர்-வாகம் இதுவரை எந்த பணியும் செய்யவில்லை.
சனத்குமார் ஆற்றில் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு மற்றும் துார்-வாரப்படாததால், கழிவுநீர் ஓடையாக சுருங்கியுள்ளது. இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த-வுடன் சனத்குமார் ஆற்றை துார்வாரி, கழிவுநீர் கலப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திற்கு தேவையான நல்லாட்சி அமைய, தர்மபுரி தொகு-தியில் போட்டியிடும் எனக்கு 'மாம்பழம்' சின்னத்தில் ஓட்டு-போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், அனைத்து ரேஷன் கார்டுதார-ருக்கும், 10,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், விலையில்லா பிரிட்ஜ், கல்விக்கடன், பயிர் கடன் தள்ளுபடி, பாலுக்கான கொள்-முதல் விலை உயர்வு, மது மற்றும் போதை பொருட்கள் முற்றிலு-மாக ஒழிக்கப்பட்டு, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது, பா.ம.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்-டர்கள் என பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி