பணம் பட்டுவாடா ரூ.69,800 பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை நித்யா தலைமையிலான குழுவினர் பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் ரோட்டில் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர்.
அப்போது பட்டுகோணாம்பட்டியை சேர்ந்த செந்தில், 54, மற்றும் ரவி, 51, இருவரும் ஹீரோ ஹோண்டா பைக்கில் வந்-தனர். அவர்களை சோதனை செய்தபோது பைக்கில், தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்ய பதிவேடுகள், பட்டுகோணாம்பட்டி ஊராட்சி வாக்காளர் பதி-வேடு, வீடுகளின் பதிவு மற்றும் அவர்களுக்கு வழங்க, 23,800 ரூபாய் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு, அதை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று அ.பள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில், தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருவ-தாக வந்த ரகசிய தகவலின்படி நேற்று மாலை, பறக்கும் படை-யினர் சென்று தணிக்கை செய்தனர். அப்போது தி.மு.க.,வினர் சிலர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி கொண்டிருந்தது தெரிய-வந்தது. பறக்கும் படை அதிகாரி நித்யா மற்றும் குழுவினர், அவர்களிடம், 46,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு... கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்
-
இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
-
காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு
-
ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்