தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு பா.ம.க.,வுக்கு ஓட்டளியுங்கள் அன்புமணி இறுதி கட்ட பிரசாரம்

தர்மபுரி: தர்மபுரி சட்டசபை தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியாக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் அன்புமணி, நேற்று மாலை தர்மபுரி டவுனில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது, அவர் பேசியதாவது:பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொடுரமான சூழல் தமிழகத்தில் இருக்கிறது. உங்கள் பிள்ளைகள், பேர பிள்ளைகளுக்கு கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசப்-படுத்தும், தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில், 1.30 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். தர்மபுரி தொகுதி மட்டுமல்ல மாவட்டத்தையும் வளர்ச்சி பெறச்செய்ய சவுமியா பாடுபடுவார்.
பெண்ணுரிமைக்காக, ஐ.நா., சபை வரை சென்று பேசியவர். மாவட்ட வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவார். மொரப்பூர் - தர்மபுரி ரயில் பாதை திட்டம், தர்மபுரி சிப்காட் தொழிற்-பேட்டை திட்டம் நிறைவேற்றப்படும். வேலைதேடி வெளி மாநி-லங்களுக்கு செல்வோர் சொந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவர். இங்குள்ள இளைஞர்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும். பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவதற்கு ஏற்ற, வேட்பாளரை கொடுத்துள்ளோம். தர்மபுரி தொகுதியில் போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் சவுமியா உங்களுக்காக உழைக்கும் வேட்பாளர். அவருக்கு கட்சி, மதம், ஜாதி, இனம் பாராமல் ஓட்டுபோட்டு வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement