பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அ.தி.மு.க.வால் தான் தர முடியும்: வேட்பாளர் பரமசிவம் திட்டவட்டம்
பல்லடம்:''பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க ஆட்சியை அ.தி.மு.க.,வால் மட்டுமே தர முடியும்'' என, பல்லடம் அ.தி.மு.க., வேட்பாளர் பரமசிவம் பிரசாரம் செய்தார்.
பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொங்கலுார் மற்றும் உகாயனுார் சுற்றுவட்டாரக் கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் பரமசிவம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாகப் போதைப் பொருள் நடமாட்டம் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே ஊடுருவியுள்ளது கவலையளிக்கிறது. தி.மு.க.வினரே இதில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் போதைப் பொருட்கள் முழுமையாக ஒழிக்கப்படும்.
விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது போல், அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நுாற்றுக்கணக்கான பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.கவை நிராகரிக்க வேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு