நல்லாறு பாதுகாப்பு இயக்கம் :100 சதவீதம் ஓட்டளிக்க சபதம்

திருப்பூர்:திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் சங்கமிக்கும் நல்லாற்றைத் துார்வாரி மீட்டெடுக்க வலியுறுத்தி, திருமுருகன்பூண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு 'நல்லாறு பாதுகாப்பு இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் உறுப்பினர்கள் அனைவரும் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொறுப்பேற்கும் புதிய அரசு இந்த ஆற்றுப் பாதுகாப்புப் பணிக்கு உரிய நிதி மற்றும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement