விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி 25 ஆக உயர்வு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி, சிகிச்சையில் இருந்த இரு பெண்கள் நேற்று இறந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா, 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர், கட்டனார்பட்டி வனஜா பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் மதியம், 3:15 மணிக்கு சரவெடி பின்னும் ஒரு அறையில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், சேர்வைக்காரன்பட்டி, ஆதிப்பட்டி, திருத்தங்கலை சேர்ந்த வேல்சாமி, 56, பாண்டியம்மாள், 55, உட்பட, 23 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பேச்சியம்மாள், 51, பஞ்சவர்ணம், 57, நேற்று இறந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முத்து மாணிக்கம், அவரது மனைவி ஈஸ்வரி மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில், ஏற்கனவே எட்டு பேர் காயமடைந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட போது, 2வது முறை பட்டாசு வெடித்ததில், ஆறு போலீசார், ஒரு தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர்.
நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர் கோவிந்த ராவ் தலைமையில், கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனையில் கேட்டறிந்தனர்.
இறந்தவர்களின் உறவினர்கள், 20 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை வாங்க மறுத்து, நேற்று காலை, அரசு மகப்பேறு மருத்துவமனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., ஸ்ரீநாதா பேச்சு நடத்தினார்.
தொடர்ந்து, அவர்களிடம் கலெக்டர், எஸ்.பி., சிறப்பு அலுவலர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், உடல்களை வாங்க மறுத்து காத்திருக்கின்றனர்.
கலெக்டர் கூறியதாவது:
இறந்தவர்களுக்கு தலா, 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு, தலா 2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. விபத்து ஏற்பட்ட ஆலையை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க அதிக குழுக்கள் ஏற்ப டுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும்.
ஒரு பட்டாசு ஆலை உரி மையாளர் செய்யும் தவறால், மாவட்டத்தில் பட்டாசு தொழில் பாதிக்கப்படுகிறது. விதிமீறி செயல்படும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு, பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.
ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட் டத்தில் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது. விபத்தால் பாதிக்கப்படும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 5.50 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக் கப்பட்டதை அடுத்து, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு