அண்ணன், அண்ணியை கொன்று தற்கொலைக்கு முயன்ற தம்பி
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் பழனிசாமி, 55; இரண்டாவது மகன் சுப்பிரமணி, 50. பழனிசாமி, தன் மனைவி ஈஸ்வரியுடன் வடமாநிலத்தில் தோசை கடை நடத்தினார். இவருக்கும், சகோதரர் சுப்பிரமணிக்கும் சொத்து தகராறு இருந்தது.
பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் தேர்தலில் ஓட்டு போட, கீரிபட்டிக்கு பழனிசாமி வந்தார். முன்விரோதத்தில் இருந்த சுப்பிரமணி, நேற்றிரவு 7:00 மணிக்கு, பழனிசாமி வீட்டுக்கு சென்று, வீட்டின் முன்பாக இருந்த ஈஸ்வரியை வெட்டி கொலை செய்தார்.
பின், கீரிபட்டி மந்தையில் அமர்ந்திருந்த பழனிசாமியையும் வெட்டி கொலை செய்தார். அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதையடுத்து, அரிவாளால் தன் தலையிலும் வெட்டிக்கொண்டார்.
உசிலம்பட்டி போலீசார், சுப்பிரமணி வைத்திருந்த அரிவாளை கைப்பற்றி, காயமடைந்த அவரை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு