ரூ.4.23 கோடி பறிமுதல்
திருநெல்வேலி: திருநெல்வேலி ராஜவல்லிபுரத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரிடமிருந்து ரூ.5.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் என்.ஜி.ஒ.,காலனி பகுதியில் தி.மு.க., நிர்வாகி ஒருவர் தன் தையல் கடையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளும்படி வாக்காளர்களுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். அதையறிந்த பறக்கும் படையினர் அங்கு சென்று ரூ.98 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.4 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 925 ஐ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு குழு அதிகாரி ஜொசிட்டாள் தலைமையில் போலீசார், பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேட்பாளர்கள் வாகன பேரணி நெரிசலில் திணறிய மக்கள்
-
கட்டத்தை உடைத்து முதல்வரானேன் 2வது முறையும் ஆட்சிக்கு வரப்போகிறேன்: கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
-
தமிழக மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தருவது அ.தி.மு.க.,தான் :பென்ஜமின் பிரசாரம்
-
இரட்டை இலைக்குதான் ஓட்டு பதிவானதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்: வளர்மதி வேண்டுகோள்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :சகோதரர்கள் 'போக்சோ'வில் கைது
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
Advertisement
Advertisement