'வாகன ஏற்றுமதி காலம் 70 நாட்களாக அதிகரிப்பு'
புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக, லத்தீன் அமெரிக்காவுக்கான இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி காலம், 50ல் இருந்து 70 நாட்களாக அதிகரித்து உள்ளதாக பஜாஜ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
வாகனம் மற்றும் அவற்றின் உதிரிபாக உற்பத்திக்கு எல்.பி.ஜி., எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. போரின் காரணமாக எல்.பி.ஜி., இறக்குமதி தடைபடுவதால், உற்பத்தியாளர்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அவற்றின் விலையும் அதிகரிக்கிறது.
வினியோக தொடரின் மீதுள்ள அழுத்தம் காரணமாக, பஜாஜ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், உற்பத்தியை முழு அளவில் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கின்றன. இதனால், ஏற்றுமதி ஆர்டர்களுக்கு டெலிவரி காலம் அதிகரிக்கிறது.
மஹிந்திரா, ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன விலையை உயர்த்தியுள்ளன. போர் முடிந்தாலும், வினியோக தொடர் இயல்பு நிலைக்கு வர, ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகலாம் என வாகன நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
@block_B@ ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரியும். ஆனால், அது வினியோக தொடரில் அலை அலையாக பாதிப்புகளை உருவாக்கி, பெரிய தளவாட சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால், வாகன ஏற்றுமதி காலம், 50ல் இருந்து 70 நாட்களாக அதிகரித்துள்ளது. - ராகேஷ் சர்மா, செயல் இயக்குநர், பஜாஜ்block_B
மேலும்
-
மாதர் தம்மை மகிமைப்படுத்தும் 'பிங்க்' வண்ண வாக்குச்சாவடிகள்
-
ஓட்டுச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதி; அதிகாரிகள் தீவிரம்
-
பிரதான கால்வாய் புதுப்பிப்பு எப்போது? வாக்குறுதி மட்டும் மாறல
-
வெயிலோடு விளையாடாத குழந்தைகளின் எலும்புக்கு பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
-
சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காக காஞ்சி ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை