பயன்பாட்டிற்கு வராத கூட்டுக் குடிநீர் திட்ட தொட்டிகள் :பற்றாக்குறையால் மக்கள் அவதி
சிவகாசி:சிவகாசி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராததால் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவிக்கின்றனர். எனவே தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வதற்காக 2019 ல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ஓரளவிற்கு முடிந்த நிலையில் கிராமங்களில் குடிநீர் வினியோகம் முழுமையாக இல்லை. ஒரு சில ஊராட்சிகளில் தற்போது வரையிலும் மேல்நிலை குடிநீர் தொட்டு கட்டும்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு சில ஊராட்சிகளில் தொட்டி கட்டப்பட்டும் குடிநீர் ஏற்றவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட தொட்டிகளில் உள்ளூர் போர்வெல் மூலம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.
உதாரணமாக சிவகாசி ஆனையூர் ஊராட்சி அலுவலகம் அருகே ஆறு மாதங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் சாட்சியாபுரம் பகுதி முழுவதும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். சிலோன் காலனி, நாரணாபுரம் விஸ்வநத்தம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேல் நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை. கோடை காலம் துவங்கி வெயில் கொளுத்துகின்றது. இதனால் குடிநீரின் தேவை அதிகரிக்கும். எனவே கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்