ஸ்ரீவி.,யில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள்னு: பாதுகாப்பில் வெளி மாநில போலீசார்
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் மலையடிவார கிராமங்கள், பதட்டமான ஓட்டுச் சாவடிகள் பாதுகாப்பு பணியில் வெளி மாநில போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொகுதியில் 308 ஓட்டு சாவடிகள் உள்ளது. இதில் புலிகள் காப்பக மலையடிவாரமான செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் மக்கள் குடியிருப்பு, வத்திராயிருப்பு ராம் நகர் மலைவாழ் மக்கள் ஓட்டுச்சாவடிகள் என 17 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த ஓட்டு சாவடிகள் பாதுகாப்பிற்கு வெளி மாநில துப்பாக்கி ஏந்திய போலீசார்களுடன் உள்ளூர் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.கள், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பிரச்சனைக்குரிய ஓட்டு சாவடிகளை கண்காணிக்க மத்திய அரசு அலுவலகங்கள், வங்கி பணியில் உள்ள அலுவலர்கள் 11 பேர் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஓட்டு பதிவிற்கு தேவையான அனைத்து ஆவணங்கள், எந்திரங்கள் கொண்ட பைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இன்று அந்தந்த ஓட்டு சாவடிக்கான அலுவலர்களிடம் வழங்கப்பட உள்ளது.
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்