பறக்கும் படையை திசை திருப்பி பட்டுவாடா; ஸ்ரீவில்லிபுத்துாரில் கட்சிகள் விறுவிறுப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் பறக்கும் படையை திசை திருப்பி கட்சிகள் பண பட்டுவாடாவை விறுவிறுப்புடன் செய்தனர்.

இத்தொகுதியில் அரசியல் கட்சிகள் , சுயேச்சை்கள் உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 12 நாட்களாக காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.


ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை முதல் இரு அரசியல் கட்சிகள் தங்களது பண பட்டுவாடாவை துவக்கினர். அப்போது போலீசார் பறக்கும் படைக்கு தவறான தகவல் அனுப்பி அவர்களை திசை திருப்பி தங்களது பண பட்டுவாடாவை நேற்று மாலை வரை எந்தவித பிரச்சனையும் இன்றி செய்தனர்.

புகார் வரப்பட்ட பகுதிகளுக்கு சென்று பறக்கும் படையினர் நேரடி ஆய்வு செய்தபோது அது பொய் புகார் என தெரிய வந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் கூறினார்.

காலை மம்சாபுரத்தில் ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரிவினர் போலீஸ், பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்து பறக்கும் படை நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசாரும், பறக்கும் படையினரும் ஏமாற்றுடன் திரும்பினர்.

Advertisement