முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ஆண்டிபட்டி:சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் கொடியேற்று விழா நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விழா ஏப்ரல் 28 ல் துவங்குகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோயில் செயல் அலுவலர் சுந்தரி தலைமையில் பக்தர்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 28ல் அம்மன் சிம்ம வாகனத்திலும், 29ல் அன்ன வாகனம், 30ல் முத்துப்பல்லக்கு, மே 1ல் பூ பல்லக்கில் பவனி வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு அம்மன் கோயில் வளாகத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மே 2ல் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் மே 5 ல் மறு பூஜையும் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
Advertisement
Advertisement