நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள, ஊட்டி, கூடலுார் (தனி), குன்னுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில், 78.49 சதவீதம் ஒட்டு பதிவானது.
நீலகிரி மாவட்டம், 'ஊட்டி சட்டசபை தொகுதியில், 6 பேர்; கூடலுார் தொகுதியில், 6 பேர்; குன்னுார் தொகுதியில், 6 பேர்,' என, 3 தொகுதிகளில், தி.மு.க.,- அ.தி.மு.க.,- பா.ஜ.,- காங்., மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த மொத்தம், 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று மாவட்டம் முழுவதும், 736, ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. பதற்றமான, 74 ஓட்டுச்சாவடிகளில் தலா ஒரு நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்பு பணி ஓட்டுப்பதிவு மையங்களில் சி.ஆர்.பி.எப்., ஆயுதப்படை போலீசார் உட்பட மாவட்டத்தில், 1,466 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை பணி நடந்தது. இந்நிலையில், காலை நேர குளிரை பொருட்படுத்தாமல் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள் ஓட்டு பதிவு மையங்களில் குவிந்தனர்.
அதன்பின், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலிலும் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மாலை, 5:00 மணி நிலவரப்படி, 62.36 சதவீதம் ஓட்டு பதிவானது. அதில், ஊட்டியில், 74.34; குன்னுாரில், 75.85 சதவீதம்; கூடலுாரில், 77.53 சதவீதம் ஓட்டு பதிவானது. மாலை, 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், 78.49 சதவீதம் ஓட்டு பதிவானது.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்