2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், 2021ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 20 லட்சம் பேர் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர். வெளியூர் வாக்காளர்களுக்கு வசதியாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், ஓட்டுப்பதிவின் உச்சத்தை எட்ட முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 2025ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். கடந்த, 21 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படாததால், இறந்த வாக்காளர்கள் மற்றும் நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தன. பலரது பெயர்கள், இரண்டு தொகுதிகளில் இடம்பெற்று இருந்தன.











எஸ்.ஐ.ஆர்.,
இதையடுத்து, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், தகுதியற்றவர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுத்தது.
இதற்காக, தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள், 2025ம் ஆண்டு நவம்பரில் துவங்கின.
வாக்காளர்களின் வீடுகளில் நேரடி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு பின், வாக்காளர் பட்டியலில் இருந்து, 97.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
பின், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கும், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கும், கடந்த ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
5.73 கோடி பேர்
அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியலை, பிப்ரவரியில் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன் பின்னரும் கூட, வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தற்போதைய வாக்காளர் பட்டியலில், 2.80 கோடி ஆண்கள், 2.93 கோடி பெண்கள், 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 5.73 கோடி பேர் இடம்பெற்றனர்.
தமிழகம் முழுதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று, ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்பட்டது.
தி.மு.க., கூட்டணியில் 22 கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில் 12 கட்சிகளும் இடம்பெற்றன. த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிட்டுள்ளன.
முந்தைய தேர்தல்களை விட, நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டளிப்பதற்கு வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். இதற்காக, வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.
சென்னையில் பணிபுரிபவர்கள், கல்லுாரி மாணவர்கள் என, பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஓட்டுச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, காலை 7:00 மணி முதல் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு முன் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு வந்தவர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டு, ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர்.
அதன் காரணமாக, பல தொகுதிகளில், இரவு 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மொத்தம் இருந்த, 6.29 கோடி வாக்காளர்களில், 4.63 கோடி பேர், அதாவது 73.63 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு பின், நேற்று நடந்த தேர்தலில், மொத்தமாக 85.03 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.83 கோடி பேர் ஓட்டளித்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். கடந்த தேர்தலை விட, கூடுதலாக 20 லட்சம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.
தொழில் மற்றும் அலுவல் காரணமாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், வெளியூர்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கல்வி காரணமாக ஏராளமான கல்லுாரி மாணவர்களும், சென்னை போன்ற நகரங்களில் தங்கியுள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
அதனால், அவர்களால் ஓட்டுப் போட முடியவில்லை. தாமதமாக புறப்பட்ட பலரும், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னரே, சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்தனர். அவர்களும் ஓட்டுப் போட்டிருந்தால், ஓட்டுப்பதிவில் தமிழகம் புதிய உச்சத்தை தொட்டிருக்கும். கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்ததற்கு, நீண்ட தொலைவு பஸ்கள் இயக்கப்பட்டதில் நடந்த குளறுபடியே காரணம் என, பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுதும் ஓட்டுப்பதிவு அமைதியாக முடிந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டன. அந்தந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு, அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.
மாநிலத்தில் பதிவான ஓட்டுக்கள், 62 மையங்களில், மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
@block_B@ அலைமோதியது கூட்டம் ஆர்வமா, அலையா?
தமிழகத்தில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுச்சாவடிகளில் இதுவரை பார்க்காத வகையில், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் பலரும், காலை முதல் காத்திருந்து ஓட்டளித்தனர். பல மாவட்டங்களில் பகல் நேர வெயில் சுட்டெரித்தது. அதை பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்திருந்தனர். இது வாக்காளர்களின் மவுன புரட்சியா; கடும் போட்டியே காரணமா; இளைஞர்கள் ஆர்வமா; மாற்றத்திற்கான அறிகுறியா; ஆதரவு அலையா என, அரசியல் கட்சிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்கள், தங்களது ஐந்தாண்டு கால திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அமோக ஆதரவளித்துள்ளதாக, தி.மு.க.,வினர் பெருமிதம் கொள்கின்றனர். ஐந்து ஆண்டுகால அரசின் அவலத்திற்கு எதிராக, மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் உறுதியாக கூறுகின்றனர். இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சியாக ஓட்டளித்துள்ளது, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என, த.வெ.க.,வினர் நம்புகின்றனர்.block_B
அதிக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதால், தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைவணங்குவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நேற்று அவர் அளித்த பேட்டியில், ''தமிழகம், மேற்கு வங்கத்தில் நடந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற ஒவ்வொரு வாக்காளருக்கும், இந்திய தேர்தல் கமிஷன் தலை வணங்குகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழகம்,மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன,'' என, கூறியுள்ளார்.
எல்லாம் சரி..... காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு நோட்டிஸ் அனுப்புனீர்களே.....விளக்கம் கொடுத்தாரா இல்லை சம்பிரதாயத்திற்கு நோட்டிஸ் அனுப்புனீர்களா ???
2021 மக்கள் தொகைக்கும் தற்போதைய மக்கள் தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் வசதியா மறந்துட்டாங்க போல..மக்கள் தொகை கூடும் போது வாக்காளர் எண்ணிக்கையும் கணிசமாக கூடும். இது போக SIR கணக்கெடுப்பு மூலம் முக்கால் கோடி பேரு நீக்கம். கூட்டி கழிச்சு பார்த்தால் கடந்த தேர்தல்கள் போலதான் இப்போதும்...பெருசா சாதனை என்று சொல்ல முடியாது
இந்த 20லட்சம் கூடுதலான வோட்டுக்கு மூலக்காரணம் நடிகர் விஜய் என்ட்ரி இல்லாவிடில் இவ்வளவு ஓட்டு விழ வாய்ப்பு இல்லை. விஜய்க்கு வந்த தேர்தல் பிரச்சார கூட்டம் அப்படியே ஓட்டாக மாறி உள்ளது. இத்தருணத்தில் திமுக அரசு பஸ்வசதிகளை குறைத்து இளைஞர் ஓட்டு போடாமல் தடுத்ததால் இன்னும் 10 லட்சம் ஓட்டு இழப்பு. இதனுடைய தாக்கம் திமுகவுக்கு பலத்த அடி கொடுக்கும். மேலும், திமுக ஆட்சிக்கு வராமல் இருக்கு உலை வைக்கும். ஆக, இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மைல்கல்லாக ௮௫.௧௫%ஓட்டு பதிவாகி உள்ளது. இதனால் விஜய்க்கு 30% ஓட்டு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை இந்த தேர்தல் 85.15% ஓட்டு பதிவு எடுத்து காட்டுகிறது. தொங்கு தமிழக சட்டசபை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மே 4 அன்று உமது ஆசையில் மண் விழும்
புதிய இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் ....
தமிழகத்தில் நிறைய வாக்காளர்கள் திருட்டு திராவிடத்தின் சதியால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாட்டிக்கொண்டார்கள். எல்லோரையும் ஓட்டுப்போட சொன்னால் மட்டும் போதுமா? அதற்குரிய போக்குவரத்து வசதிகளை ஏன் ஏற்படுத்தவில்லை? இதனால், சென்னையில் வேலை செய்யும் இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் வாக்குகளை செலுத்த முடியவில்லை. அந்த வாக்குகள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிரானவை. அதனால்தான் தென்மாவட்டங்களில் வாக்கு சதவீதம் குறைந்தது. இதற்க்கு யார் பொறுப்பு? பெரும்பாலானோர் காலை ஓட்டுபதிவன்று காலை 8 மணிவரை சென்னையை தாண்ட முடியவில்லை. சரி, தேர்தல் ஆணையத்தில் ஒரு 2 மணி நேரம் வாக்குப்பதிவு செய்யும் நேரத்தை அதிகரிக்க கேட்டால், 6 மணிக்குள் உள்ளே சென்றுவிட்டால் 8 மணிவரை வாக்களிக்க அனுமதிப்பார்களாம். அது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். 6 மணிக்குள் தென்மாவட்டங்களை அடைய முடியாது என்பதால்தானே கூடுதலாக 8 மணிவரை உள்ளே அனுமதிக்க கேட்கிறோம். 8 மணிவரை வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிருக்க வேண்டும்.ஆனால், என்ன செய்வது நமது தேர்தல் ஆணையம்தான் புத்திசாலிகள் நிறைந்ததாயிற்றே. தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் 95 சதவீதம் வாக்குகள் நிச்சயம் பதிவாகியிருக்கும். எப்படியோ ஆளும் திருட்டு கழகங்களுக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதியிருப்பார்கள் என்பது நிச்சயம்.
ஆமா.. பேருந்துகளையும் இயக்கணும். ஓட்டுப் போட லீவும் உடணும்னு யோசிக்கும் தத்திகள். IAS ஆனா மட்டும் போதாது. அத்தியாவசிய சேவை ஆளுங்களிடம் முன்னாடி ஓட்டு வாங்கியிருக்க வாணாமா?
தேர்தலுக்கு ஒரு மாசம் முன்னாடி கெவுனர் ஆட்சி அமல் படுத்தலாம். இதனால் மக்களாவது பாதிக்கப் படாமல் இருப்பார்கள். அதைச் செய்யும் நேர்மை ஒருபயலுக்கும் இல்லை.
வருடம் முழுவதும் நாட்டில் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் கமிஷனுக்கு என்றே தனிப்பட்ட பணியாளர்களை பயிற்சி கொடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். தமிழக அரசு அதிகாரிகள் வெட்கமே இல்லாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இவர்கள் மூலமாக ஆளங்கட்சிக்கு கிடைத்த வாக்குகளை எப்படி கணக்கிடுவது? போனது போனதுதானே? பேரூந்துகளை திட்டமிட்டு குறைத்த அதிகாரிகளையும் அவர்களுக்கு உத்தரவிட்ட திமுக தலைவரையும் சட்டப்படி தண்டிக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான விஷயம்தான். ஆனால் இது பாதிகிணறு தாண்டிய கதையாகி விட்டது. ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள் இளைஞிகளை அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்று தீர்மானித்து தடுத்த ஆளுங்கட்சி அராஜகம் கண்டனத்துக்குரியது. திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் துடைத்தெறிய வேண்டும். இவ்வளவு வன்மம் கொண்டவர்கள் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்கள்? இந்தத் தேர்தலுடன் திமுகவிற்கு முடிவுரை எழுதப்பட வேண்டும். இறைவன் அருள் புரியட்டும்.
இன்னமும் கள்ள ஓட்டு இருக்கும். மறுபடியும் SIR வேண்டும்.மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்