மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை
புதுச்சேரி: மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த கணவர் அதிக ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன், 42; மோல்டிங் வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்ததை மனைவி கண்டித்தார். இதனால், கணவன் மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கணவரிடம் கோபித்து கொண்டு, அவரது மனைவி பரமேஸ்வரி தனது தாய் விட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், மாமியார் விட்டுக்கு சென்ற செந்தில்நாதன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவர் வர மறுக்கவே மனமுடைந்த அவர், கடந்த 19ம் தேதி, ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டார்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.