மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி தொகுதி மறவபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 132, 133 இரு ஓட்டு சாவடிகள் உள்ளன. மதியம் 1:50 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் 20 நிமிடம் ஓட்டுப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. ஓட்டளிக்க வந்த சிலர் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் மாலை 5:30 மணிக்கு மேல் 70 க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பின்பு ஓட்டுச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே அனுமதிக்க வலியுறுத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமையிலான போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து டோக்கன் பெற்றவர்கள் ஓட்டு அளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதால் இரவு 7:15 மணி வரை ஓட்டு பதிவு நீடித்தது.

Advertisement