3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு

தேனி:மாவட்டத்தில் 3 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக காலை 7:30 மணிக்கு துவங்கின.

பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட பாகம் 341 ஓட்டுச்சாவடி, தேனியில் மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி., உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை மாதிரி ஓட்டுப்பதிவு முடிந்த பின் வி.வி.,பேட் இயந்திரம் சரியாக பொருத்த வில்லை. இதனால் ஓட்டுப்பதிவு 7:00 மணிக்கு துவங்கவில்லை. இயந்திரத்தை சரியாக பொருத்திய பின் 7:28 மணி அளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. இதனால் வாக்காளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

போடி தொகுதிக்கு உட்பட்ட கோடாங்கிபட்டி திருசெந்துார் அங்கன்வாடி மையத்தில் பாகம் 274, அமராவதி நடுநிலைப்பள்ளியில் பாகம் 275 ஓட்டுச்சாவடி அமைந்துள்ளன. இந்த ஓட்டுச்சாவடி மையங்களிலும் மாதிரி ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரங்களை சரியாக இணைக்காததால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement