வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
பெரியகுளம்:பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதி தி.மு.க., கூட்டணி வி.சி., வேட்பாளர் சக்திவேல், அ.தி.மு.கூட்டணி அ.ம.மு.க., வேட்பாளர் கதிர்காமு நேற்று ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளுக்கும் சென்று ஒட்டுப்பதிவை கண்காணித்தனர். மதியம் 1:00 மணிக்கு வி.சி.,வேட்பாளர் சக்திவேல், வடுகபட்டி மார்க்கண்டேய நடுநிலைப்பள்ளி ஓட்டு சாவடிக்கு செல்லும்போது, பகவதி அம்மன் கோயில் அருகே எதிர்புறம் அ.ம.மு.க., வேட்பாளர் கதிர்காமு ஆதரவாளர்களுடன் 3 கார்களில் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்றார். குறுகிய ரோடு என்பதால்
ஒரு கார் சென்ற பிறகே மறுபுறம் அடுத்த கார் செல்வது வழக்கம். ஆனால் இரு வேட்பாளர்களின் கார் டிரைவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கார் உரசுவது போல் சென்றனர். அப்போது காரின் முன் பகுதியில் உட்கார்ந்திருந்த இரு வேட்பாளர்களான சக்திவேல், கதிர்காமு நேருக்கு நேர் பார்த்தும் ஒருவருக்கொருவர் முறைத்தபடி சென்றனர்.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 5 நாட்களில் ரூ.2080 குறைவு
-
கோல்கட்டாவில் பிரதமர் மோடி: படகில் பயணம் செய்து மகிழ்ச்சி
-
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; உபியில் பயங்கரவாதிகள் 2 பேர் கை து
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை அணையில் நீர் திறப்பு
-
ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
யார் மனசுல யாரு?; ஓயாது 'விவாதம்'