வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பெ.நா.பாளையம்: கணுவாயில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கணுவாய் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள யுவபாரதி பள்ளி சார்பில் சட்டசபை தேர்தலை ஒட்டி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, 100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு, என் உரிமை உள்ளிட்ட விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களிடம் வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி கணுவாயில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வந்து, பள்ளி வளாகத்தை அடைந்தது.

Advertisement