மக்கள் நலத்திட்ட பணிகள் :அ.தி.மு.க., பாண்டியன் பெருமிதம்
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் பாண்டியன் நகர பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 425 க்கும் மேற்பட்ட மக்கள் திட்ட பணிகளை செய்து முடித்துள்ளேன்.
இதில் ரூ.13.76 கோடியில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், 213 பணிகள்; குமராட்சி ஒன்றியத்தில், ரூ.6.62 கோடியில் 118 பணிகள்; புவனகிரி ஒன்றியத்தில், ரூ.1.35 கோடியில் 17 பணிகள்; சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ரூ. 2.10 கோடியில், 39 பணிகள்; பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாயில், 23 பணிகள்; கிள்ளை பேரூராட்சியில், ரூ.67 லட்சத்தில் 12 பணிகள்; அண்ணாமலை நகர் பேரூராட்சியில் ரூ. 61 லட்சத்தில், 5 பணிகள் நடைபெற்றுள்ளது.
கொரோனா பாதித்த கடந்த, 2020 ம் ஆண்டு கடலுார் மாவட்டத்திலேயே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொரோனா நோய் கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி முதல் முறையாக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 33 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
3 ஆயிரத்து 650 நாட்களில், ரூ. 27 கோடியில், 425 க்கும் மேற்பட்ட திட்ட பணிகளை செய்துள்ளேன். 3 வது முறையாக சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் என்னை, இரட்டை இலை சின்னத்தில், மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா