இலவச வாலிபால் பயிற்சி சிறுவர்களுக்கு அழைப்பு
சென்னை:எழும்பூரில் துவங்க உள்ள கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாமில் சேர சிறுவர், சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 42வது ஆண்டு கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாம், வரும் 27ம் தேதி, காலை 6:30 மணிக்கு எழும்பூரில் துவங்க உள்ளது.
இதில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் இருவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேரடியாக பெயர்களை பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, முகாம் ஒருங்கிணைப்பாளரை, 93822 07524 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
Advertisement
Advertisement