பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

அன்னூர்: அன்னூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள், வெளிநாட்டு மதுபான விற்பனை கடைகள் அனைத்திற்கும், 21, 22, 23, ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விடுமுறை நாட்களில், அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக, மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னூர் போலீசார், நேற்று, காரனூரில் சோதனை நடத்தியதில், அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமார், 39. என்பவர், 22 குவாட்டர் மது பாட்டில்கள், 34 'ஆப்' மது பாட்டில்கள் என, 56 மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அன்னூர் போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சரவணகுமாரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement