மஸ்ட் கீழடி அருங்காட்சியகம் விடுமுறை
கீழடி:கீழடி அருங்காட்சியகத்திற்கு தேர்தலை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகமும், திறந்தவெளி அருங்காட்சியமும் இயங்கி வருகிறது. தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் இயங்கி வரும்.
தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கீழடி அருங்காட்சியங்களுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். அருங்காட்சியகங்களில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 11ம் கட்ட அகழாய்வு பணிகளும் நடந்து வருகின்றன. நாளை தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால், அருங்காட்சியங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement